லண்டன்:மனித உடலமைப்பை முப்பரிமாணத்தில் (3டி) வடிவத்தில் பார்க்கும் புதிய வசதியை "கூகுள் லேப்ஸ்' மூலம் கூகுள் நிறுவனம் வழங்குகிறது.இணைய முன்னணி தேடுதல் தளமான கூகுள், தங்களது வாடிக்கையாளர்களுக்கு புதிய மற்றும் நவீன வசதிகளை அவ்வப்போது வழங்கி வருகிறது. கூகுள் எர்த், கூகுள் மேப் உள்ளிட்ட வசதிகள் மூலம், நமது தெருக்கள், நகரங்கள், நாடுகள் உள்ளிட்டவற்றை பற்றி துல்லியமாக தெரிந்து கொள்ள முடியும். இந்த வசதிகள் மூலம், ஏராளமானோர் பயனடைந்து வருகின்றனர்.
இந்த வகையில், கூகுள் நிறுவனம் தற்போது, 'கூகுள் லேப்ஸ்' மூலம், "பாடி பிரவுசர்' என்ற புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.இதன் மூலம், மனித உடற்கூறுகளை "3டி' வடிவத்தில் பார்க்க முடியும். புதிய வசதி மூலம், மனித உடலின் நுண்ணிய பகுதிகளை பெரிதுபடுத்தியும், சிறிதாக்கியும், பல்வேறு கோணங்களிலும் பார்க்க முடியும். மனிதனின் உள்ளுறுப்புகள் எத்தகைய வடிவத்தில் உள்ளன. எலும்புகள், தசைகள் எத்தகைய வடிவத்தில் உள்ளன என்பதை முப்பரிமாணத்தில் பார்க்க முடியும்.கூகுள் லேப் தரும் இந்த வசதியை, எல்லாவிதமான பிரவுசரிலும் பயன்படுத்த முடியாது. அதற்கென பிரத்யேகமாக "வெப் ஜி.எல்., கிராபிக்ஸ் ஸ்டாண்டர்' என்ற வசதி தேவை. இது, கூகுள் குரோம் மற்றும் பயர்பாக்ஸ் பீட்டா ஆகிய பிரவுசர்களில் உள்ளது.இவற்றை http://bodybrowser.googlelabs.com/
என்ற தளத்திலிருந்து டவுண்லோடு செய்து கொள்ளலாம்.
Source: Dinamalar
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.