நெய்வேலி : நெய்வேலி புத்தக கண்காட்சியை சென்னை ஐகோர்ட் நீதிபதி கே.என். பாஷா இன்று மாலை திறந்து வைக்கிறார்.நெய்வேலி நிறுவனத்தின் சார்பில் நடக்கும் புத்தகக் கண்காட்சியினை இன்று (9ம் தேதி) மாலை 6 மணியளவில் என்.எல்.சி., சேர்மன் அன்சாரி முன்னிலையில் சென்னை ஐகோர்ட் நீதிபதி பாஷா திறந்து வைக்கிறார். தொடர்ந்து 10 நாட்கள் நடக்க உள்ள புத்தகக் கண்காட்சியில் ஒவ்வொரு நாளும் ஒரு பதிப்பகத்தாரும், ஒரு எழுத்தாளரும் கவுரவிக்கப்படுகிறார்கள்.
நாள்தோறும் ஒரு புத்தகமும் வெளியிடப்படுகிறது.தென்னிந்தியாவை சேர்ந்த 150 பதிப்பகத்தார் இக்கண்காட்சியில் பங்கு பெறுகின்றனர்.
நாள்தோறும் ஒரு புத்தகமும் வெளியிடப்படுகிறது.தென்னிந்தியாவை சேர்ந்த 150 பதிப்பகத்தார் இக்கண்காட்சியில் பங்கு பெறுகின்றனர்.
இலக்கியம், இலக்கணம், மொழியியல், சமயம், தத்துவம், கவிதை, நாடகம், சிறுகதை, வரலாறு போன்ற பண்பாட்டு நூல்கள் மட்டுமின்றி இன்ஜினியரிங், மெடிக்கல், கம்ப்யூட்டர், கணிதவியல் உள்ளிட்ட கல்வி தொடர்பான அனைத்து புத்தகங்களும் சலுகை விலையில் கிடைக்கும். இது தவிர வானியல் தொடர்பான அண்மைக்கால ஆய்வினை காட்டும் படியான கோளரங்கம், தொலைநோக்கி, மியசியோ பேருந்து ஆகியவை இக்கண் காட்சியில் இடம் பெறுகின்றன.
மேலும் குழந்தைகளுக்கான டோரா டோரா, பொம்மை ரயில், ரங்கராட்டினம், தென் இந்தியாவின் பிரசித்தி பெற்ற கலைஞர்களை கொண்டு நடத்தப்படும் கலைநிகழ்ச்சிகள், நாடகங்கள், நாட்டுப் புற கலைகள், மாயாஜால மந்திரக் காட்சிகள் நாள்தோறும் நடக்க உள்ளது. மேலும் பொதுமக்களிடையே உடல்நலம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் என்.எல்.சி., பொது மருத்துவமனை சார் பில் பலவிதமான இலவச மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட உள்ளன.இந்த புத்தகக் கண்காட்சிக்கான ஏற்பாடுகளை இயக்குனர்கள் சுரேந்தர் மோகன், பாபுராவ், கந்தசாமி, சேகர், விஜிலென்ஸ் முதன்மை அதிகாரி பாலசுப்ரமணியன் மற்றும் உயர் அதிகாரிகள் செய்து வருகின்றனர்.
Source: Dinamalar
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.