திருப்பூர் கம்பன் கழக நிகழ்ச்சிக்கு வருமாறு சென்னை வந்திருந்த டாக்டர் கலாமை சந்தித்து கேட்டோம் நானும் "கிளாசிக் போலோ' சிவராமனும்.. "தொழிலதிபர்களுக்கும், கம்பன் கழகத்துக்கும் என்ன சம்பந்தம்' என்று ஆச்சர்யத்தோடு கேட்டார். எங்கள் முயற்சியை பாராட்டிய தோடு நிகழ்ச்சிக்கு வருவதாகவும் ஒப்புக் கொண்டார்.
45 நிமிடம் மட்டும் டாக்டர் கலாம் நிகழ்ச்சியில் கலந்து கொள் வார் என்று எங்களுக்கு சொல்லப் பட்டிருந்தது. அதற்கேற்ப நிகழ்ச்சி நிரல் அமைத்திருந்தோம். டாக்டர் கலாம் சென்றபிறகு சுகிசிவம் பேசும் வகையில் ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது. காலையில் இருந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டவர் இறுதியாக எங்கள் நிகழ்ச்சிக்கு வருகை தந்தார்.
டாக்டர் கலாமின் பேச்சில் அவருக்கு இருந்த தமிழ்க்காதலை உணர்ந்தோம். அவர் கிளம்பும் நேரத்தில் சுகிசிவம் மூலம் சால்வை அணி வித்தோம். அப்போது சுகிசிவத்தின் பெருமை களை எடுத்துச் சொன் னோம். அதைக் கேட்டவர், உங்க பேச்சை நானும் கேட்கிறேன் என்றபடி அமர்ந்து விட்டார். முன்னாள் குடியரசுத் தலைவர் என்கிற அந்தஸ்தில் உள்ள ஒருவரின் வெளிப்படை யான பேச்சையும் செயலையும் கண்டு அசந்து போனோம். சொல்லின் செல்வர் பட்டம் உங்களுக்கு தகுதியானதுதான், தமிழைக் கேட்கிற சுகம் அலாதி யானது என்று சுகிசிவத்தை பாராட்டினார்.
அடுத்தநாள் அவரை ஆழியாறு அறிவுத் திருக் கோயிலுக்கு அழைத்துச் சென்றேன். சுவாமிஜி வேதாத்ரி மகரிஷி உருவாக் கிய மனவளக்கலைப் பயிற்சியை பற்றியும் தற் போது தமிழகப் பள்ளி களில் பாடமாகவே சேர்க்கப்பட்டுள்ளது பற்றியும் எடுத்துச் சொன்னேன்.
""கனவு காணுங்கள் என்று எல்லா இடங்களிலும் இளைஞர்களிடம் பேசி வருகிறேன். வெறுமனே கனவு காணாமல் அதற்கான முயற்சிகளை மேற்கொள்ளுங் கள் என்று சொல்வேன். தொடர் முயற்சிகளை மேற்கொள்ள மனோபலம் வேண்டும். அந்த மனோபலத்தை தரும் மனவளர்ச்சிக் கலையை கற்றுக் கொள்ளுங்கள் என்றும் இனி பேசுவேன்'' என்று கூறினார்.சொன்னது போலவே பல இடங்களில் பேசியும் வருகிறார்.
-திரு.நாகராஜன், நிறுவனர்,
ராம்ராஜ் காட்டன்ஸ்
Source: nakkheeran
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.