Showing posts with label விண்ணுக்கும் வாணுக்கும். Show all posts
Showing posts with label விண்ணுக்கும் வாணுக்கும். Show all posts

Sunday, December 26, 2010

மனித உடற்கூற்றை முப்பரிமாணத்தில் பார்க்கலாம்:கூகுள் வழங்கும் புதிய வசதி


           லண்டன்:மனித உடலமைப்பை முப்பரிமாணத்தில் (3டி) வடிவத்தில் பார்க்கும் புதிய வசதியை "கூகுள் லேப்ஸ்' மூலம் கூகுள் நிறுவனம் வழங்குகிறது.இணைய முன்னணி தேடுதல் தளமான கூகுள், தங்களது வாடிக்கையாளர்களுக்கு புதிய மற்றும் நவீன வசதிகளை அவ்வப்போது வழங்கி வருகிறது. கூகுள் எர்த், கூகுள் மேப் உள்ளிட்ட வசதிகள் மூலம், நமது தெருக்கள், நகரங்கள், நாடுகள் உள்ளிட்டவற்றை பற்றி துல்லியமாக தெரிந்து கொள்ள முடியும். இந்த வசதிகள் மூலம், ஏராளமானோர் பயனடைந்து வருகின்றனர்.

          இந்த வகையில், கூகுள் நிறுவனம் தற்போது, 'கூகுள் லேப்ஸ்' மூலம், "பாடி பிரவுசர்' என்ற புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.இதன் மூலம், மனித உடற்கூறுகளை "3டி' வடிவத்தில் பார்க்க முடியும். புதிய வசதி மூலம், மனித உடலின் நுண்ணிய பகுதிகளை பெரிதுபடுத்தியும், சிறிதாக்கியும், பல்வேறு கோணங்களிலும் பார்க்க முடியும். மனிதனின் உள்ளுறுப்புகள் எத்தகைய வடிவத்தில் உள்ளன. எலும்புகள், தசைகள் எத்தகைய வடிவத்தில் உள்ளன என்பதை முப்பரிமாணத்தில் பார்க்க முடியும்.கூகுள் லேப் தரும் இந்த வசதியை, எல்லாவிதமான பிரவுசரிலும் பயன்படுத்த முடியாது. அதற்கென பிரத்யேகமாக "வெப் ஜி.எல்., கிராபிக்ஸ் ஸ்டாண்டர்' என்ற வசதி தேவை. இது, கூகுள் குரோம் மற்றும் பயர்பாக்ஸ் பீட்டா ஆகிய பிரவுசர்களில் உள்ளது.இவற்றை http://bodybrowser.googlelabs.com/
என்ற தளத்திலிருந்து டவுண்லோடு செய்து கொள்ளலாம்.

Source: Dinamalar


Thursday, December 23, 2010

பூமியை விட 400 மடங்கு பெரிதான கிரகம் பால்வெளிக்கு அப்பால் கண்டுபிடிப்பு


               பால்வெளி மண்டலத்திற்கு அப்பால் புதிய கிரகம் ஒன்றை முதல் முறையாக விண்வெளி ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். விண்வெளியில் இதுவரை 500க்கும் மேற்பட்ட கிரகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், முதல்முறையாக பால்வெளி மண்டலத்திற்கு அப்பால் புதிய கிரகம் ஒன்று தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஹெல்மி ஸ்டிரீம் என்ற நட்சத்திர கூட்டத்தின் அருகே இந்த கிரகம் காணப்படுகிறது. பால்வெளி மண்டலத்தின் தென் பகுதியில் உள்ள இந்த நட்சத்திர கூட்டம் பார்னாக்ஸ் அல்லது பர்னேஸ் என்று அழைக்கப்படுகிறது. 600 கோடி முதல் 900 கோடி ஆண்டுகளுக்கு முன் இந்த நட்சத்திர கூட்டம் பால்வெளி மண்டலத்துடன் இணைந்திருக்க வேண்டும் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.

            பூமியில் இருந்து 2 ஆயிரம் ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள இந்த கிரகம், எச்.ஐ.பி., 13044 பி என அழைக்கப்படுகிறது. இந்த கிரகத்தில் ஹைட்ரஜன், ஹீலியம் வாயுக்கள் நிரம்பி உள்ளன. வியாழன் கிரகத்தை விட 25 சதவீதமும், பூமியை விட 400 மடங்கும் எடை அதிகமானது. சிலி நாட்டில் லா சில்லாவில் அமைந்துள்ள ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மைய ஆய்வாளர்கள் 2.2 மீட்டர் குறுக்களவு உள்ள மிகப்பெரிய தொலைநோக்கி மூலம் ஆய்வு செய்ததில் இந்த கிரகம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த கிரகம், அதன் அருகில் உள்ள நட்சத்திரத்தை சுற்றி வருகிறது. அந்த நட்சத்திரத்தில் இருந்த ஹைட்ரஜன் வாயு முற்றிலும் எரிந்து விட்டது. இதனால் அந்த நட்சத்திரம் விரிவடைந்து "சிவப்பு குள்ளன்' என்ற நிலைக்கு மாற்றமடைந்து வருகிறது. அந்த நட்சத்திரத்தின் மையப்பகுதியில் உள்ள ஹீலியம் வாயு தற்போது எரிந்து வருகிறது.

           நட்சத்திரத்தை சுற்றி வரும் கிரகம், அதன் ஈர்ப்பு விசையின் காரணமாக இழுக்கப்பட்டு விழுங்கப்படும். இதனால் அந்த கிரகத்தின் ஆயுள் முடிந்து விடும் என்று கருதப்படுகிறது. ஜெர்மன் நாட்டு ஹெடில்பெர்க் நகரில் உள்ள மேக்ஸ் - பிளாங் விண்வெளி ஆய்வு மைய ஆய்வாளர் ரெய்னர் கெல்மன் கூறுகையில், "பால்வெளி மண்டத்திற்கு அப்பால் ஒரு கிரகம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது இதுவே முதல் முறையாகும். புதிய கிரகம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது மிகுந்த உற்சாகமூட்டக்கூடிய நிகழ்வாகும். மேலும், பல புதிய நிகழ்வுகளை கண்டுபிடிக்க வேண்டும் என்ற ஆர்வத்தை இது ஏற்படுத்தியுள்ளது' என்றார்.

-நமது சிறப்பு நிருபர்-
Source: Dinamalar

Wednesday, August 4, 2010

"பிரபஞ்ச' ரகசியத்தை அறிய விஞ்ஞானிகள் ஆர்வம்


                பூமி உள்ளிட்ட கோள்கள், நட்சத்திரங்கள் ஆகியவை பிரபஞ்சத்தில் எப்படி பிறந்தன என்பது குறித்து அறிந்து கொள்ள உலகில் உள்ள விஞ்ஞானிகள் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். ஆனால், அவர்கள் அறிந்து கொண்டது மிக சிறிதளவே. எனவே, மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள தொடர்ந்து ஆய்வுகள் செய்யப்பட்டு வருகின்றன.

              இதன் ஒரு பகுதியாக, அணுவை மோத விட்டு பிரபஞ்சம் தோன்றிய ரகசியத்தை அறியும் மிகப்பெரிய முயற்சியில் அமெரிக்கா, ரஷ்யா, சுவிட்சர்லாந்து, ஜப்பான் நாட்டு விஞ்ஞானிகள் ஈடுபட்டனர். இவர்களுக்கு உதவியாக இந்தியா, கனடா, சீனா உள்ளிட்ட விஞ்ஞானிகளும் பணியாற்றினர். இதற்காக, சுவிட்சர் லாந்தில் ஜெனீவா நகருக்கு வெளியே 45 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் "செர்ன்' என்ற இயற்பியல் சோதனைக்கூடம் அமைக்கப்பட்டது. அமெரிக்காவில் சிகாகோ நகருக்கு அருகேயும் இதே போன்று சிறியளவில் "டெவட்ரான்' என்ற இயற்பியல் சோதனை கூடம் அமைக்கப்பட்டது. சோதனைக்கூடத்தில் அணு உற்பத்தி செய்யும் இயந்திரம் மிகுந்த பாதுகாப்புடன் வைத்து, உற்பத்தி செய்யப்பட்ட அணுக்கள் பலமுறை சுற்றி அதிக திசைவேகத்துடன் ஒன்றின் மீது ஒன்று மோதும் படி செய்து, ஏற்படும் விளைவுகள் குறித்து அறிந்து கொள்வதால் பிரபஞ்சம் எப்படி தோன்றியது என்ற ரகசியம் வெளிவரும் என்று விஞ்ஞானிகள் கருதினர்.

             சுவிஸ் - பிரான்ஸ் எல்லையில் பூமிக்கடியில் "ஜீரோ' டிகிரி வெப்பநிலையில் சுரங்க அமைப்பில் கட்டப்பட்ட பரிசோதனை கூடத்தில் முதல் வெடிப்பு நடத்தப் பட்டது. 27 கி.மீ., தூரத்தில் வைக்கப்பட்டிருந்த இரண்டு முனைகளிலிருந்து மின்காந்த விசையின் மூலம் சுழற்றி அனுப்பப்பட்ட புரோட்டான்கள் மிக வேகமாக வந்து மோதின. அப்போது மனிதனால் உருவாக்கப்பட்ட மிகச்சிறிய அணுவிலிருந்து 7 டிரில்லியன் "எலக்ட்ரான் ஓல்ட்' ஆற்றல் ஏற்பட்டது. "செரன்' அமைப்பின் தலைவர் ரால்ப்ஹியூர் கூறுகையில், "பிரபஞ்சம் எப்படி உண்டானது என்பது குறித்து கண்டறிவதில் விஞ்ஞானிகள் சிறிதளவு முன்னேற்றம் அடைந்துள்ளனர். இது பாராட்ட வேண்டிய, மகிழ்ச்சியான செய்தி.

            இங்கு அமைக்கப் பட்டுள்ள இயந்திரம் விண்வெளி ஆய்வில் புதிய சகாப்தத்தை தோற்றுவித்துள்ளது. மேலும், இரண்டு வித்தியாசமான அணுக்கள் மோதும் போது தோன்றும் அதிக சக்தியை அறிந்து கொள்ள, தற்போது உள்ளதை விட நவீன இயற்பியல் சோதனைக்கூடம் தேவை. சமீபத்தில் நடந்த சோதனைகள் மற்றும் அதன் விளைவுகள் குறித்து "செரன்' தலைவர் ரால்ப்ஹியூர் வெளியிட்ட முடிவுகளை பாரிஸ் நகரில் நடந்த "இயற்பியல் உயர் சக்தி' என்ற சர்வதேச மாநாட்டில் குழுமியிருந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட இயற்பியல் விஞ்ஞானிகள் அறிந்து கொண்டனர்.

              தற்போதுள்ள சாதனங்கள் மற்றும் தொழில்நுட்பங்கள் மூலம் செய்த சோதனையில் பிரபஞ்சம் எப்படி உண்டானது என்பது குறித்து ஒரளவிற்கு தெரிந்தது கொள்ள முடிகிறது. ஆயிரத்து 400 கோடி ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட பெரு வெடிப்பு காரணமாக பிரபஞ்சம் பிறந்தது என்பதை கொள்கையளவில் விஞ்ஞானிகள் ஏற்றுக் கொண்டுள்ளனர். அடுத்ததாக 57 ஆயிரத்து 825 கோடி ரூபாய் செலவில் 50 மைல் நீளத்திற்கு சர்வதேச இயற்பியல் கூடம் அமைத்து சோதனைகள் செய்ய திட்டமிடப் பட்டுள்ளது. இந்த சோதனை சர்வதேச ஒத்துழைப்புடன் செய்யப்படும். "செரன்' சோதனை கூடத்தின் நோக்கம் உயர் சக்தி குறித்த ஆய்வு. ஆனால், ஹம்பர்க்கில் துவக்கப்படவுள்ள சர்வதேச பரிசோதனை கூடம் அதிக தொழில்நுட்பம் கொண்டதாக இருக்கும்' என்றார்.

              "கடந்த 2008ம் ஆண்டு செப்டம்பரில் அணுக்கள் மோதும் சோதனை செய்ய முடிவு செய்யப்பட்டது. ஆனால், சில பிரச்னைகள் ஏற்பட்டதால் அது நவம்பர் மாதத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டது. பின், வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது. அது முதல் வெற்றி தான் தொடர்கிறது. முன்பு புரோட்டான்களுக்கிடையே மோதல் ஏற்பட வைத்து சோதனை செய்யப்பட்டது. ஆனால், சர்வதேச பரிசோதனை கூடத்தில் இனி நடைபெறவுள்ள சோதனையின் போது, எலக்ட்ரான் மற்றும் பாசிட்ரான் எதிரெதிரானவைகளை மோத விட்டு நடைபெறும் விளைவுகள் குறித்து ஆய்வு செய்யப்படும்' என்கிறார் அணு இயற்பியல் அறிஞரான கே வார்ம்செர்.

- நமது சிறப்பு நிருபர்

Saturday, July 24, 2010

"புவியீர்ப்பு விசை என்பது மாயையே' : "பற்ற' வைக்கிறார் எரிக்

   
               புதுடில்லி : "புவி ஈர்ப்பு விசை என்பது வெறும் மாயையே' என, விஞ்ஞான உலகத்தில் "பற்ற' வைத்திருக்கிறார் எரிக் வெர்லிண்டே என்ற விஞ்ஞானி.இயற்பியலின் அடிப்படை விதியான புவி ஈர்ப்பு விசை என்பது குறித்து தற்போது பல்வேறு கருத்துக்கள் வெளிவந்துள்ளன. ஆம்ஸ்டர்டாம் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணிபுரியும், எரிக் வெர்லிண்டே என்ற விஞ்ஞானி, சமீபத்தில், ஆய்வறிக்கை ஒன்றை சமர்ப்பித்துள்ளார். "ஆன் தி ஆரிஜின் ஆப் கிராவிட்டி அண்டு தி லாஸ் ஆப் நியூட்டன்' என்ற அந்த அறிக்கையில், புவி ஈர்ப்பு விசை பற்றி சந்தேகத்தை எழுப்பியுள்ளார்.

         எரிக் மட்டுமல்லாமல் பல்வேறு விஞ்ஞானிகளும் இந்த சந்தேகத்தை எழுப்பி விடை தேடி வருகின்றனர். வெப்பம் மற்றும் காற்றின் செயல்பாடுகளையும், தன்மையையும் ஆராயும், "தெர்மோடைனமிக்ஸ்' துறையில் புவி ஈர்ப்பு விசை பற்றிய நியூட்டனின் விதிகள் முக்கிய பங்காற்றியிருக்கின்றன. இதுபற்றி சந்தேகப்படும் விஞ்ஞானிகள், "இதுவரை நவீன அறிவியல் புவி ஈர்ப்பு விசையை தவறான கோணத்தில் தான் பார்த்து வந்திருக்கிறது. புவி ஈர்ப்பு விசைக்கும் ஆதாரமான ஒரு சக்தி இருக்கிறது. அதுதான் ஒட்டு மொத்த பிரபஞ்சத்தையும் இயக்கி வருகிறது. பிரபஞ்ச விரிவாக்கத்துக்கு இடம் கொடுத்து வரும் "கரும் சக்தி' (டார்க் எனர்ஜி) பற்றி, கேலக்சிக்களை ஈர்த்து வைத்திருக்கும் "கரும்பொருள்' (டார்க் மேட்டர்) பற்றி மேலும் அறிய புவி ஈர்ப்பு விசையைப் புதிய கோணத்தில் நோக்க வேண்டும்' என்று கூறுகின்றனர்.

       எரிக் இதுபற்றி கூறுகையில், "உங்கள் தலைமுடி, ஈரத்திலோ வெப்பத்திலோ சுருண்டு விடுகிறது. தலைமுடியை சுருள வைக்க இயற்கை அந்த இரண்டைத் தேர்ந்தெடுத்துள்ளது. ஆனால், தலைமுடியை மீண்டும் நேராக்கிக் கொள்ள, வேறொரு சக்தி தேவைப்படுகிறது. அது தானாக, அதாவது இயற்கையாகவே நேராகி விடுவதில்லை. அதுபோல, புவியீர்ப்பு விசை என்பது தானாக உருவானது அல்ல. அது, வேறொரு சக்தியால் உருவாக்கப்படுகிறது. அந்த ஈர்ப்பு விசை பிரபஞ்சத்தில் ஒரு ஒழுங்குமுறையை நிலைநாட்டப் பயன்படுத்தப்படுகிறது' என்று கூறுகிறார். "அவர் கூறுவது ஒன்றும் எங்களுக்கு விளங்கவில்லை. மொத்தத்தில் நாம் இந்தப் பிரபஞ்சத்தை முழுமையாகத் தெரிந்து கொள்ளவில்லை என்பது மட்டும் தெரிகிறது' என்று கூறுகின்றனர் விஞ்ஞானிகள் சிலர்.
Source: Dinamalar

Thursday, July 1, 2010

அறிவு சார்ந்த சமுதாயம் உருவாவது எப்படி: ஆழியாறு விழாவில் கலாம்


        பொள்ளாச்சி: "அறிவு சார்ந்த சமுதாயம் உருவாக வேண்டுமென்றால், ஒவ்வொரு மனிதனும் விழிப்புணர்ச்சி பெற்ற மனிதனாக மாற வேண்டும்' என்று, ஆழியாறு அறிவுத் திருக்கோவிலில் நடந்த பட்டமளிப்பு விழாவில், முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் பேசினார். "யோகமும் மனித மாண்பும்' என்ற பட்டப்படிப்பு படித்த 1,009 பேருக்கு முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் சான்றிதழ் வழங்கினார். அவர் பேசியதாவது: பட்டமளிப்பு விழாவில் "நல்லொழுக்கத்தின் மூலம் விழிப்புணர்ச்சி பெற்ற சமுதாயம்' என்ற தலைப்பில் பேச விரும்புகிறேன். வேதாத்திரி மகரிஷியின் "ஞானமும் வாழ்வும்' என்ற புத்தகத்தை படித்தேன்.


          அதில், "பரமாணுக்கள் கூடிய தொகுப்பு அணுவாக வெளிப்படுகிறது. அணுக்கள் பல இணைந்து பேரணு எனப்படுகிறது. பேரணுக்கள் பல இணையும் தொகுப்புகள் தான் பற்பல தோற்றங்களாகும். கோள்கள், பூமி, உயிர்கள் யாவும் அணுக்கள் கூடி இயங்கும் தொகுப்பு நிகழ்ச்சிகளே' என்று குறிப்பிட்டுள்ளார். அணுக்களைப் போன்று, ஓய்வின்றி நாமும், ஓயாது, துவளாது முயற்சி செய்தால், இறையருளால் நம்நாடு மிக விரைவில் வளர்ந்த நாடாக உயரும் என்பதில் ஐயமில்லை.

        மனதிலே நல்லொழுக்கம் இருந்தால் நடத்தையில் அழகு மிளிரும்; நடத்தையில் அழகு இருந்தால் குடும்பத்தில் சாந்தி நிலவும்; குடும்பத்தில் சாந்தி இருந்தால் நாட்டில் சீர்முறை உயரும்; நாட்டில் சீர்முறை இருந்தால் உலகத்தில் அமைதி நிலைக்கும். நல்லொழுக்கம் என்பது முழு உலகத்திற்கும் பொதுவானது. உலகத்தில் அமைதி நிலவ மனதில் நல்லொழுக்கம் உதிக்க வேண்டும். மனதில் நல்லொழுக்கம் உதிக்க செய்ய மாதா, பிதா, குரு ஆகியோரால் மட்டுமே முடியும். ஆரம்பப்பள்ளி ஆசிரியர்களே முதல்குரு ஆவார்கள். ஆரம்ப கட்டத்தில் கற்றுக்கொள்ளும் நல்லொழுக்கம் தான் முதுமை வரையிலும் துணை நிற்கும்.

           ஒரு விழிப்புணர்ச்சி பெற்ற சமுதாயம் உருவாவதற்கு நல்லொழுக்கம் முக்கியமானது. இதற்கு ஒவ்வொரு மனிதனும் விழிப்புணர்ச்சி பெற்ற மனிதனாக மாற வேண்டும். இந்திய பொருளாதாரம் வளர்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது. உற்பத்தி துறையில் வளர்ச்சி அடைந்துள்ளது. ஆனால், விவசாயம் 2 சதவீதம் தான் அடைய முடிந்துள்ளது. கிராமப்புறத்திலும், நகரத்திலும் சுமார் 22 கோடி மக்களின் வாழ்க்கைத் தரத்தை வறுமைக்கோட்டிற்கு மேல் உயர்த்த வேண்டும். இந்த இலக்கை அடையவே "இந்தியா 2020' தொலைநோக்கு திட்டத்தை தயார்படுத்தியுள்ளோம். இவ்வாறு அப்துல் கலாம் பேசினார்.

Source: Dinamalar





Sunday, June 27, 2010

புத்தரை தவறாக விளங்கிக் கொண்ட இடமாக இலங்கை உள்ளது - சுகிசிவம்


      இலங்கையில் பௌத்த மதத்தை சரியாகப் புரிந்து கொள்ளவில்லையென்றும் புத்தரை மிகத் தவறாக விளங்கிக் கொண்ட இடமாக இலங்கை உள்ளதெனவும் குறிப்பிட்ட சொல்வந்தர் சுகிசிவம் அரசியல் துறந்து ஞானத்திற்கு வந்தவர் புத்தரென்றும் ஞானம் துறந்து அரசியல் செய்யும் பௌத்தம் ஆபத்தானதெனவும் தெரிவித்தார்.

           உலக சமுதாய சேவா சங்கத்தின் பொன்விழாவும் இலங்கை மனவளக்கலை மன்ற அறக்கட்டளையின் ஐந்தாம் ஆண்டு நிறைவு விழாவும் வெகு விமரிசையாக கடந்த 5 ஆம் திகதி வெள்ளவத்தை இராமகிருஷ்ண மிஷன் மண்டபத்தில் கலைநிகழ்வுகள், சிறப்புரைகள், விளக்கங்களுடன் இடம்பெற்றது.

             இந்நிகழ்வில் கலந்துகொண்டு "வல்லமை தாராயா' என்ற தலைப்பில் உரையாற்றுகையிலேயே இந்தியாவின் தமிழ்நாட்டைச் சர்ந்த சொல்வந்தர் சுகிசிவம் இவ்வாறு கூறினார்.

         "வல்லமை தாராயோ' என்ற தலைப்பில் சொல்வந்தர் ஆற்றிய உரைவடிவம் இங்க தரப்படுகின்றது அதில் அவர் தெரிவிக்கையில்; உலகளாவிய ரீதியில் பக்திக்கு கோயில் கட்டும் நிலைமை காணப்படுகின்ற நிலையில் முதன் முதலாக அறிவுக்கு கோயில் கட்டியவரென்ற பெருமைக்குரியவர் தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.
          என்னுடைய வாழ்வில் பக்தி இலக்கியங்களுக்குத்தான் முக்கியத்துவம் கொடுக்கின்றன். இன்னமும் அதனைத்தான் பின்தொடர்கின்றன்.
        ஆனால், பக்தி இலக்கியங்கள் உலகிற்கு எவ்வளவு நன்மை செய்திருக்கின்றதா அந்தளவுக்கு தீமையும் விளைவிக்கப்பட்டுள்ளதென்பதை எவரும் மறுக்கவோ மறக்கவோ முடியாது.

               எல்லா மதத்தவரும் ஒரு மதநூலை வைத்திருக்கின்றார்கள். அதைப் படிக்கின்றார்கள். பின்பற்றுகின்றார்கள். பின்னர் ஏன் சண்டை போடுகின்றார்கள்.

         அது கடவுளால் சொல்லப்பட்ட வேதம் உண்மை, எனில், அதைப் பின்பற்றுபவர்கள் ஏன் சண்டையிட்டுக் கொள்கின்றார்கள்.

    ஒரு இறைவனால் அருளப்பட்ட வேதநூலைக் கையில் வைத்திருப்பவர்கள் ஒருவருடன் ஒருவர் சண்டையிடுவதற்கு என்ன காரணம்?

          பக்தி மார்க்கத்தினால் அவர்கள் கும்பிடும் கடவுளை உயர்வாகக் கருதிய பின்னர் ஒரு கடவுளை தன்னுடைய கடவுளாக ஏற்றுக் கொண்டவன் அடுத்த கடவுளையெல்லாம் குப்பைத் தொட்டியாகக் கருதுகின்றான். ஒரு கடவுளை ஏற்றுக் கொண்டவன் அடுத்த மதத்தின் வேதப்புத்தகத்தை வெறும் காகிதக் குப்பைத் தொட்டியாக கருதுகின்றான்.

      ஆனால், அறிவுபூர்வமாக சிந்தித்தால் தான் ஒரே விடயத்தை பலஞானிகள் பல்வேறு வடிவங்களில் கூறியுள்ளனர் என்பதை புரிந்து கொள்ள முடியும்.

        அதனால் மதங்களை பின்பற்றுகிறவர்கள் ஆபத்தானவர்கள். மதங்களைப் புரிந்து கொள்பவர்கள்தான் உலகிற்கு தேவையானவர்கள்.
மதங்களை பின்பற்றுகின்றவர்கள் முட்டாள்கள். அவர்கள் சுயமாக சிந்திப்பதில்லை.

          எல்லா சமயங்களும் பக்தி முக்கியமென வலியுறுத்தும் நிலையில் மதத்தின் பெயரால் யூதர்கள் உருவாக்கப்படுகின்றனர். இது ஆபத்தில் போய் முடியுமென்பதற்காக எத்தனையா அறிஞர்கள் இடையில் குறுக்கிட்டனர். எவரும் கவலைப்படவில்லை.

          பக்தி மார்க்கத்தில் ஒழுக்கம் பெரிய விடயமாகப் பேசப்படவில்லை. ஒரு விபசாரியுடன் வாழ்ந்தவன் கூட கடவுள் நாமத்தை சொன்னால் மன்னிக்கப்படுவானென கருதப்பட்டது.ஒழுக்க மீறல்கள் மன்னிக்கப்படுகின்றன. கொலை செய்தவனுக்கு மன்னிப்பு வழங்கப்படுகின்றது. கடவுள் மன்னிப்பாரென்பது மதபோதகர்கள் சொல்லிக் கொண்டிருக்கும் பொய். மதபோதகர்களிடமிருந்து மதத்தை கற்கக்கூடாது. மத ஸ்தாபகர்களிடமிருந்துதான் மதத்தை கற்கவேண்டும்.

        மத ஸ்தாபகர்கள் உண்மையை சொன்னவர்கள். மதபோதகர்கள் பொய்மையை சொன்னவர்கள்.மக்கள் சிந்தித்து தெளிவடைய வேண்டும். மக்கள் சிந்திக்க வண்டுமென்பதற்காக தெருத் தெருவாக நடந்து ஊர் ஊராக திரிந்து மக்களைச் சிந்திக்க வைத்தவர்தான் அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி

    கடவுளை பக்தி என்ற உணர்ச்சியின் முன்னால் நாம் முன்னிலைப்படுத்துகின்றாம். இந்நிலையில் விஞ்ஞானத்தை வைத்து கடவுள் தன்மையை உட்புகுத்த முயன்றவர் வேதாத்திரி மகரிஷி.

        ஆனால், மதங்களைப் பொறுத்தவரையில் நீ ஒரு தவறு செய், உதாரணமாக ஒரு தொகை பணத்தை கொள்ளையிட்டு அதில் ஒரு குறிப்பிட்ட வீதத்தை ஆலய உண்டியலில் போட்டுவிட்டால் அந்தக் கொள்ளைக்கு கடவுள் உடந்தையாக இருப்பார் என்ற அயாக்கியத்தனத்தை மதங்கள் மக்கள் மத்தியில் ஏற்படுத்திவிட்டது.

       ஒருவன் ஒரு பெண்ணைப் பலவந்தமாக பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்துகின்றான். அவ்வாறு செய்பவன் பாவி ஆகின்றான். அவனை கடவுளிடம் சென்று மன்னிப்பு கோரிவிடு என மதம் கூறுகின்றது.கடவுள் மன்னிப்பார். வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட பெண் மன்னிப்பாளா?

        ஒருவன் ஒழுக்கமாக இருக்க வேண்டும் என்பதை மதம் வற்புறுத்த வேண்டும். இந்நிலையில் நீ எப்படியாயினும் வாழ்ந்துவிடு கடவுள் மன்னிப்பாரெனில் அந்தக் கடவுளும் தவையில்லை கடவுளைப் பற்றிய சிந்தனையும் தேவையில்லை.

            இந்நிலையில் வாழ்வியல் நெறிகளை முதல்முதலாக வற்புறுத்திய புத்தர் உள்ளிட்ட சிலர் நாத்திகத் தன்மையை வற்புறுத்தினர்.புத்தர் சிந்தனையை முன்வைத்தவர். இலங்கை மக்களுக்கு புத்தரைப்பற்றி சரியாகத் தெரியாது. புத்தர் மிகத் தவறுதலாக விளங்கிக் கொண்ட இடங்களில் இலங்கை ஒன்று.

            இந்த உலகில் அரசியலைத் துறந்து ஞானத்துக்கு வந்தவர் புத்தர். ஆனால், ஞானத்தைத் துறந்து அரசியல் செய்து கொண்டிருக்கும் பௌத்தம் ஆபத்தானது. புத்தருடைய ஞானம் கொண்டாடப்பட்டது. வணங்கப்பட்டது. அதேபோல வாழ்க்கையில் ஒழுக்கமாக வாழாதவர்கள் ஒருபோதும் மாட்சமடைய முடியாதென கூறியவர் வேதாத்திரி மகரிஷி.

    ஒருமனிதன் வாழ்வாங்கு சீராக வாழ வழிசமைப்பதற்கான நடைமுறைப்பயிற்சிகளை கற்றுத் தருவதுதான் மனவளக்கலையின் அடிப்படை நோக்கம். எமது உடலை ஆரோக்கியமாக வைத்திருப்பதற்கான வழிவகைகளையும் மகரிஷி கூறியிருக்கின்றார். தர்மசாஸ்திரம நமக்கு சிறந்தது. வாஸ்து சாஸ்திரம் நன்றாக இருந்தாலும் தர்மசாஸ்திரம் கடைப்பிடிக்காவிடில் வாஸ்து சாஸ்திரத்தில் பயனில்லை.

          உடலுடன் எப்படி வாழவண்டும் என்ற கலையை ஒவ்வொருவரும் கற்றுக்கொள்ள வண்டும்.உடலை சரிப்படுத்துவது, உள்ளத்தை சீரமைப்பது, உயிரை நீட்டிப்பது, இதனை ஒழுங்காக கற்பிப்பதுதான் மனவளக்கலை. மனம் வளமடையவில்லையெனில் எவ்வாறான செல்வங்கள் தொகையாகக் கிடைத்தாலும் சந்தோஷம் கிடைக்காது.

        அதேபோல காயப்படும் இயல்பு எம்மிடம் இருந்தால்தான் பிறரால் எம்மைக் காயப்படுத்த முடியும். காயப்படும் இயல்பு எம்மிடம் இல்லாவிடில் எம்மை யாராலும் காயப்படுத்த முடியாது.

      எவ்வாறான சந்தர்ப்பங்களிலும் எமக்குரிய நிலையிலிருந்து நாம் மாறக்கூடாது என்பதில் உறுதியாக இருக்க வேண்டும்.பிறரது விமர்சனங்களால் பாதிக்கப்படாத உயர் நிலைக்கு எமது மனதை இட்டுச் செல்லவேண்டும்.

          உடல் பலம், உள்ள பலத்தை அடைந்தபின் அடைய வேண்டிய நிலை ஞானநிலை.நாம் என்ன நினைக்கிறாமெனில், நமக்கு எது தெரிகின்றதோ அதுதான் சரியெனவும் எது தெரியாதோ அதுதான் தப்பெனவும் நினைக்கின்றாம்.

          உறவுகள் மேம்பட என்ற ஒரு கொள்கையை முன்வைக்கின்றார்கள். குறிப்பாக, தாய், தந்தையரை தம்முடன் வைத்துக்கொள்ள விரும்பும் ஆண்களுக்கு பெண்கள் ஒருபோதும் உடன்பாடாக இருந்ததில்லை என்பதை பெண்கள் பரிசீலனை செய்து புரிந்து கொள்ள வண்டும்.

         இறைவன் பற்றிய கொள்கையில் புரட்சிகரமான கொள்கையை மகரிஷி முன் வைக்கின்றார். அதனை ஏற்றுக்கொள்கின்ற தைரியம் நம்மிடத்தில் வரவண்டும்.

          ஒரு மனிதன் ஆன்ம விடுதலை அடைவதை சமூகத்தால் சகித்துக் கொள்ளவே முடியாது. உலகம் செய்த அயோக்கியத்தனங்களில் மிகப்பெரியது இயசுவை சிலுவையில் அறைந்தது. காரணம், அவரின் சிந்தனைகளை ஏற்கமுடியாமை.

           சுதந்திரம் உள்ள உயிர்களுக்குத்தான் சுய சிந்தனை வரமுடியும். ஒரு ஆன்மாவின் விடுதலைதான் உண்மையான மதத்தின் நோக்கமெனில் அடிமைப்படுத்துகின்ற எதுவும மதமாக அமைய முடியாது.மனிதனை சுதந்திரமாக இருக்க எது அனுமதிக்கின்றதா அதுவே உண்மையான மதமாக இருக்க முடியும்.

           பார்க்காத கடவுளுக்கும் பார்க்காத சொர்க்கத்துக்குமாக இன்று உலகம் முழுவதும் சண்டை போட்டுக்கொண்டு அழிகின்றனர்.ஆழ்ந்த சுயசிந்தனை ஊடு இறைவனைப் புரிந்துகொள்ளும் வாய்ப்பு வருகின்றதே அதுதான் இறைநிலை. கடவுளைப் படைப்பவன் என்று கூறுவது தவறு. படைப்பு என்பதுதான் கடவுளாக இருக்க முடியும்.

        இயக்கத்திலிருந்து வெளிப்படுத்துதல் தான் இறைநிலையயொழிய இறைவன் என்கிற மனிதத்தை பிரிக்க முடியாது. தன்னை உணர்வதற்கான ஒரு வழிமுறையை ஆழமாகச் சிந்திக்கின்ற ஒரு முறையாகத்தான் வேதாத்திரியம் உருவாகியுள்ளது.

    மனம் பக்குவம் அடைந்தவர்கள் போரையும் பூசலையும் விரும்புவதில்லை. போரற்ற சமுதாயம் தான்றுவதற்காகவ உலக சமுதாய சேவா சங்கத்தை மகரிஷி தோற்றுவித்தார்.மனம் சமாதானம் அடைந்தால் அருகில் வருபவனும் சமாதானம் அடைகின்றான்.

            மனிதர்கள் பலர் நினைக்கிறார்கள் கோயில் கட்டினால் புண்ணியம் என எண்ணுகின்றார்கள். ஒரு கல்லை கடவுளாக்குகின்றார்கள் ஆனால், ஒரு மனிதனை கடவுளாக்குகின்றனரா? உலகெங்கணும் கல்லை கடவுளாக்கி கோயில் கட்டும் நிலையில் மனிதனை கடவுளாக்க முற்பட்டவர்தான் மகரிஷி . சிறந்த சிந்தனைகள், சிறந்த எண்ணங்கள் என்ற கதையைத்தான் மகரிஷி வழங்கியுள்ளார். அதனைப் பின்பற்றி ஆராக்கிய வாழ்வு வாழவேண்டுமெனக் கூறி தனது உரையை நிறைவுசெய்தார்.

-நன்றி ஞாயிறு தினக்குரல்
யோ.நிமல்ராஜ்



Sunday, June 20, 2010

ஜாதிகள் இனி சாகட்டும்


பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான்,

யாதும் ஊரே யாவரும் கேளிர்,
ஒன்றே குலம் ஒருவனே தேவன்,

            ஜாதிகள் இல்லையடி பாப்பா, குலம் தாழ்த்தி உயர்த்தி சொலல் பாவம்!- இவைகள் எல்லாம் தமிழ் சமுதாயம், உலக சமூகத்திற்கு கொடுத்த கொடைகள். இதில், கணியன் பூங்குன்றன், பாரதியாரின், "ஜாதிகளே இல்லை' என்ற கருத்தில் இருந்து, திருவள்ளுவர் சிறிது வேறுபட்டு, "பிறப்பினால் அனைவரும் ஒன்றே! அவரவர்கள் செய்யும் தொழில் தான், அவர்களின் சிறப்பை வேறுபடுத்திக் காட்டுகிறது' என்கிறார்.

             "பாரத பண்பாட்டில், ஆரம்பத்தில் ஜாதிகளுக்கு இடமில்லை. அதன் பின் ஏற்பட்ட கால மாற்றத்தால், தொழில்களின் அடிப்படையில் நான்கு வர்ணங்கள் அமைந்தன. அதில் பல உட்பிரிவுகள் ஏற்பட்டு, அது படிப்படியாக பரந்து விரிந்து, இன்று எண்ணில் அடங்கா ஜாதிகள் தோன்றியுள்ளன' என அறிஞர்கள் கூறுகின்றனர்.சமூக அமைப்பால் பிளவுபட்ட நம் சமுதாயத்தை சீர்திருத்த, புரட்சியாளர்களும், சிந்தனாவாதிகளும், மகான்களும் தோன்றினர். அதன் விளைவு, "அனைவருக்கும் கல்வி, அனைவருக்கும் வேலை, அனைவருக்கும் சம நீதி' என்ற சமூக நீதி கருத்துக்கள் விளைந்தன. இந்த மாற்றம், சமுதாயத்தால் படிப்படியாக ஏற்றுக் கொள்ளப்பட்டு வருகிறது.இன்று காலனியில் உள்ளவர்களும், அக்ரஹாரத்தில் உள்ளவர்களும், ஒரே பள்ளியில், அருகருகே அமர்ந்து ஒன்றாக படிக்கின்றனர். ஒரே வாகனத்தில் ஒன்றாக பயணிக்கின்றனர்.

                 ஒன்றாக உணவருந்துகின்றனர். நகரங்களில் ஒரே வீதியில், ஒரே குடியிருப்பில் ஒன்றாக குடியிருக்கின்றனர்.காலில் செருப்பு அணிவதற்கு கூட தடை விதிக்கப்பட்டவர்கள், அரசு பதவியில், ஜனாதிபதி வரையிலான அதிகாரமிக்க பதவிகளில் அமர்ந்து, அனைவரது வணக்கங்களையும், மரியாதைகளையும் பெற முடிகிறது.கல்வி, வேலை, சமூக அந்தஸ்து, பதவி என அனைத்தையும் இன்று, ஆதிதிராவிடர்களும் பெற முடிகிறது. இத்தகைய வரவேற்கத்தக்க மாற்றங்களுக்கு, சுதந்திர இந்தியாவின் அரசியலமைப்பு சட்டமும், அன்னிய கலாசார, பண்பாடுகளும், தன்னலமற்ற அரசியல் தலைவர்களின் சேவையும் பெருமளவு உதவியிருக்கிறது. அத்துடன், சமய சார்பற்ற நாடாக இருந்தாலும், சமூகத்தில் இன்றளவும் உள்ள ஏற்ற தாழ்வுகளை களைவதற்காக, இட ஒதுக்கீட்டு முறையை, கடந்த 60 ஆண்டுகளாக அரசு அமல்படுத்தி வருகிறது. இருப்பினும், அடக்கி வைக்கப்பட்டிருந்த சமுதாயம், இன்னும் முழுமையான விடுதலை பெறவில்லை.

               அந்தச் சமுதாயம் முழுமையான விடுதலை பெறுவதற்கான அரசின் உதவிகளை, இன்னும் பல ஆண்டுகள் தொடர வேண்டிய நிலை உள்ளது. "இந்த நிலை மாற, ஜாதி அடையாளம் அவசியம். அதனால், கல்வி, வேலை, பிற சலுகைகள் என அனைத்திற்கும், அதற்கான விண்ணப்பங்களில் ஜாதியை குறிப்பிட வேண்டும்' என அரசு கூறி வருகிறது.இப்படி எந்த சமுதாய பாகுபாட்டை உடைக்க வேண்டும் என்பதற்காக அரசு முன்னின்று முயன்று வருகிறதோ, அந்த சமுதாய பாகுபாட்டையே மீண்டும் புகுத்தும் வண்ணம், இன்றைய அரசியல் நடைமுறைகள் இருந்து வருகின்றன.சமூக மாற்றத்தை கண்டு கொள்ளாமல், ஓட்டு வங்கி அரசியலை மட்டும் கருத்தில் கொண்டு, ஆதிதிராவிடர்கள், பழங்குடியினருக்கு மட்டும் இட ஒதுக்கீடு அளிக்காமல், இதர பிற்படுத்தப்பட்டோருக்கும் மத்திய, மாநில அரசுகள், சலுகைகளை வாரி வழங்கி வருகின்றன.

           இதன் மூலம், ஆதிதிராவிடர்கள், பழங்குடியினருக்கு கிடைக்க வேண்டிய சலுகைகளில் இழப்பு ஏற்பட்டு வருகிறது.உண்மையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு, இட ஒதுக்கீட்டின் நன்மைகள் கிடைக்க, அவர்களது சமூக சூழ்நிலையோ, பொருளாதார நிலையோ கணக்கில் கொள்ளப்படவில்லை. பொருளாதார அளவு கோல் என்ற, "கிரீமிலேயரை' கேட்டாலே, பேசக் கூடாத ஒன்றை சொன்னது போல் அலறுகின்றனர்.மறு பக்கம், பள்ளிகளில் கூட பாகுபாடை புகுத்தும் வகையில், ஒவ்வொரு ஊரிலும், ஆதிதிராவிடர்கள் குடியிருக்கும் பகுதியில் தனி பள்ளிகள், ஆதிதிராவிடர்கள், பிற்படுத்தப்பட்டோருக்கு என தனித்தனி ஹாஸ்டல்களை அரசே அமைத்து வருகிறது.அனைவரும் ஒரே பள்ளியில் படிக்கவும், ஒரே ஹாஸ்டல்களில் தங்கவும் தடை விதித்தவர்கள் யார், அப்படி தடை விதித்தவர்கள் மேல் அரசு எடுத்த நடவடிக்கை என்ன என்ற கேள்வி எழுகிறது."மக்கள் தொகை அடிப்படையில் இட ஒதுக்கீடு அளிக்கப்பட வேண்டும். இதற்கு, ஜாதி வாரியாக மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்த வேண்டும்' என, பல்வேறு அரசியல் கட்சிகளும், அரசுக்கு கோரிக்கை வைத்து வருகின்றன. சமூக நீதி பரவலாக கிடைக்க வேண்டும் என்பதற்காக, இந்த கோரிக்கையை வைப்பதாகவும், அவைகள் காரணம் தெரிவிக்கின்றன.

              ஜாதி வாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு எடுத்தால், இருக்கிற ஜாதிகளுக்குள்ளே உட்பிரிவுகள் அதிகமாகி சண்டைக்கும், சச்சரவுக்கும் மேலும் வழி வகுக்குமே அன்றி, உண்மையான சமூக நீதி கிடைக்காது. "மண்டல் கமிஷன் அறிக்கையை அமல்படுத்துகிறேன்' என்று சொல்லி வி.பி.சிங் கொளுத்திப்போட்ட வெடியால், வட மாநிலங்கள் பலவற்றில் ஜாதி மோதல் தீ பற்றி எரிந்தது. ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தினால், மீண்டும் அதே போல் பெரிய அளவு வன்முறை நாடு முழுவதும் வெடிக்கும் என்பது உறுதி. எல்லாரையும் மனிதராக பார்க்காமல், எந்த ஜாதி பெரிய ஜாதி என பார்க்க ஒரு கணக்கெடுப்பு அவசியமா? உண்மையான சமூக நீதி கிடைக்க வேண்டும் என்றால், கிராமங்களில் உள்ள ஏற்றத் தாழ்வுகளை களைய வேண்டும். பொருளாதார ரீதியாக பின்தங்கியுள்ள மக்களை கை தூக்கி விட வேண்டும். செய்ய மாட்டார்களே இந்த அரசியல்வாதிகள்!

- வி.கோபால கிருஷ்ணன் -பத்திரிகையாளர்
Source: Dinamalar

Thursday, April 8, 2010

Obama, Medvedev sign nuclear treaty in Prague


        Prague: President Barack Obama and Russian President Dmitry Medvedev on Thursday signed a treaty to shrink their nations' nuclear arsenals, the biggest such pact between the former Cold War foes in a generation.

      Tenaciously negotiated by even the leaders themselves, the treaty commits their nations to slash the number of strategic nuclear warheads by one-third and more than halve the number of missiles, submarines and bombers carrying them.

       In a lavish chamber within the Czech capital's presidential castle complex, the two presidents put their names to history.

        The treaty must be now be ratified by Russia's parliament and by the US Senate, where the White House lobbying effort is under way.

       The new treaty will shrink the limit of nuclear warheads to 1,550 per country over seven years. That still allows for mutual destruction several times over.

       But it is intended to send a strong signal that Russia and the US - which between them own more than 90 percent of the world's nuclear weapons - are serious about disarmament.

      White House officials told reporters on Obama's flight to Prague that tougher sanctions against Iran's disputed nuclear programme would be high on the agenda of talks between the US leader and Russian President Dmitry Medvedev before the signing.

      "The Russians are already committed to holding Iran accountable through the multilateral sanctions regime," deputy National Security Adviser Ben Rhodes said.

      The White House said the two men would also discuss the situation in Kyrgyzstan, where opposition protesters forced out President Kurmanbek Bakiyev on Wednesday in a poor Central Asian state where both Washington and Moscow have military bases.

      Russian Prime Minister Vladimir Putin recognised the interium government formed by opposition leader Roza Otunbayeva on Thursday after speaking to her by telephone, his spokesman said. There was no immediate word on whether Washington would follow suit.

      Signing of the START II treaty, which will cut arsenals held by the former Cold War foes by about one-third, comes on the heels of a US policy review narrowing the scope for using nuclear weapons and builds momentum for an April 12-13 nuclear security summit in Washington.

     Obama landed in Prague early on Thursday to Medvedev for the signing ceremony at the medieval Prague Castle, where the US president set out his goal a year ago to work towards a world without nuclear weapons.

     Medvedev said on arrival on Wednesday that the treaty could play a considerable role in shaping disarmament in the future.

Source:gulfnews

அணு குண்டுகளை அழிக்க ரஷியா-அமெரிக்கா ஒப்பந்தம்


        உலகின் இரண்டு பெரிய வல்லரசு நாடுகளான அமெரிக்கா மற்றும் ரஷியா இடையே நீண்ட காலமாக பனிப்போர் நிலவி வந்தது. அந்த சமயங்களில் இரண்டு நாடுகளும் ஏராளமான அணு குண்டுகளை தயாரித்தன.

       இந்த சூழ்நிலையில், உலகின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு அணு ஆயுதங்களை குறைக்க இரண்டு நாடுகளும் முன் வந்தன. அது தொடர்பாக நீண்டகாலமாக பேச்சு வார்த்தைகள் நடைபெற்றன. அதன் தொடர்ச்சியாக, இரு நாடுகளுக்கு இடையே இன்று ஒப்பந்தம் கையெழுத்தானது.

    வரலாற்று சிறப்பு மிக்க அந்த ஒப்பந்தத்தில் அமெரிக்க அதிபர் ஒபாமாவும், ரஷிய அதிபர் மெத்வதேவும் கையெழுத்திட்டனர்.

 Source:Nakkeeran

Wednesday, March 31, 2010

'பிங் பாங்' சோதனை வெற்றி, பிரபஞ்ச ரகசியம் தெரியும்?


        ஜெனீவா:பிரபஞ்சம் எப்படி தோன்றியது என்பது பற்றிய இரண்டாம் கட்ட, 'பிங் பாங்' (பெருவெடிப்பு) பரிசோதனை வெற்றியடைந்துள்ளது.'அணுக்கள் ஒன்று திரண்டு ஒரு பந்து போல இருந்த போது, அதில் திடீரென ஏற்பட்ட பெரிய வெடிப்பினால் அந்த அணுக் கூட்டம் சிதறி பரவ ஆரம்பித்தது. அதனால் ஏற்பட்டதே இந்த பிரபஞ்சம். இப்போதும் அந்த வெடிப்பினால் இந்த பிரபஞ்சம் விரிவடைந்து கொண்டே இருக்கிறது. குறிப்பிட்ட சில கோடி ஆண்டுகளுக்குப் பின், மீண்டும் இந்த பிரபஞ்சம் பழைய நிலைக்கு அதாவது மீண்டும் ஒன்று திரண்டு விடும்' என்பது தான், நவீன அறிவியலில் இந்த பிரபஞ்சம் தோன்றியதற்கு கூறும் காரணம். இந்தக் கொள்கை புதிய அறிவியலில், 'பிங் பாங் தியரி' (பெருவெடிப்புக் கொள்கை) எனப்படும்.

           இந்த பெருவெடிப்புக் கொள்கையைப் பரிசோதிப்பதற்காக, பிரான்ஸ் - சுவிட்சர்லாந்து எல்லையில் அமைந்துள்ள சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரத்தில், அணு ஆராய்ச்சிக்கான ஐரோப்பியக் கூட்டமைப்பான, 'செர்ன்' (சி.இ.ஆர்.என்.,), பூமிக்கடியில் 27 கி.மீ., அளவில் ராட்சத சுரங்க வடிவிலான ஒரு பரிசோதனைக் கூடத்தை அமைத்துள்ளது. காந்த ஈர்ப்பு முறையில் அமைந்த இதில், அணுக்கள் மோதும் போது ஏற்படும் பிரமாண்ட சக்தி மதிப்பிடப்படும்.இந்தக் கூடம், 'லார்ஜ் ஹெட்ரான் கொலைடர்' எனப்படும். கடந்த ஆண்டில், இந்தக் கூடத்தில் பெருவெடிப்புக் கொள்கையின் அடிப்படையில் அணுக்களில் உள்ள துகள்களை மோதவிட்டு முதற்கட்டப் பரிசோதனை நடத்தப்பட்டது.இந்நிலையில், புதிய அறிவியலில் பிரபஞ்சத் தோற்றம் குறித்த பல்வேறு சந்தேகங்களுக்கு விடையளிக்கும் விதத்தில் இரண்டாம் கட்ட சோதனை நடந்தது. அந்தச் சோதனை வெற்றியடைந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

          இதைத் தொடர்ந்து, 'செர்ன்' அமைப்பின் கட்டுப்பாட்டு அறையில் இருந்த விஞ்ஞானிகள், சோதனை வெற்றியடைந்ததைக் கொண்டாடும் வகையில் பலமாகக் கைதட்டினர். இந்த வெற்றி, புதிய அறிவியலில் இயற்பியல் துறையில் பல்வேறு புதிய பரிமாணங்களை வளர்க்கும் என்று நம்பப்படுகிறது. ஒரே நாளில் இதற்கான விடை தெரியாது. காலப்போக்கில் அணுக்கூறுகள் மோதும் போது ஏற்படும் சக்திகள் குறித்த ஆய்வின் முடிவில், பிரபஞ்சம் பற்றிய அடிப்படைத் தகவல்கள் சேகரிக்கப்படும். வரலாற்றுப் பூர்வமான பிரமாண்டமான தகவல் சேகரிப்பு இதன் மூலம் துவங்கியது என்று விஞ்ஞானிகள் கருத்து தெரிவித்தனர்.

Source: Dinamalar

Geneva atom smasher sets record


       Geneva: The world's largest atom smasher set a record for high-energy collisions on Wenesday by crashing proton beams into each other at three times more force than ever before.

     In a milestone in the $10 billion (Dh36.7 billion) Large Hadron Collider's ambitious bid to reveal details about theoretical particles and microforces, scientists at the European Organisation for Nuclear Research, or CERN, collided the beams and took measurements at a combined energy level of seven trillion electron volts.


       The collisions herald a new era for researchers working on the machine in a tunnel below the Swiss-French border at Geneva.

      "That's it! They've had a collision," said Oliver Buchmueller from Imperial College in London as people closely watched monitors.


       In a control room, scientists erupted with applause when the first successful collisions were confirmed. Their colleagues from around the world were tuning in by remote links to witness the new record, which surpasses the 2.36 TeV CERN recorded last year.


        The extra energy in Geneva is expected to reveal even more about the unanswered questions of particle physics, such as the existence of antimatter.
Yesterday's initial attempts at collisions were unsuccessful because problems developed with the beams, said scientists working on the massive machine. That meant that the protons had to be "dumped" from the collider and new beams had to be injected.

      The atmosphere at CERN was tense considering the collider's launch with great fanfare on September 10, 2008. Nine days later, the project was sidetracked when a badly soldered electrical splice overheated, causing extensive damage to the massive magnets and other parts of the collider some 100 metres below the ground.

      It cost $40 million to repair and improve the machine. Since its restart in November 2009, the collider has performed almost flawlessly and given scientists valuable data.Bivek Sharma, a professor at the University of California at San Diego, said the images of the crashed proton beams were beautiful.

        "It's taken us 25 years to build," he said. "This is what it's for. Finally the baby is delivered. Now it has to grow."


     Experiments are collecting their first physics data — historic moment here!" a scientist tweeted on CERN's official Twitter account.

Source:gulfnews



   


Monday, March 29, 2010

மனவளக்கலை 'யோகா' வில் குற்றச்செயலை தடுக்க முடியும் : அறிவுத்திருக்கோவில் விழாவில் வலியுறுத்தல்

     
         பொள்ளாச்சி : 'மனவளக்கலை யோகா மூலமாக வன்முறை, குற்றம் போன்ற சம்பவங்களை வெகுவாக தவிர்க்க முடியும்' என்று ஆழியாறு அறிவுத்திருக்கோவில் விழாவில் வலியுறுத்தப்பட்டது. பொள்ளாச்சி அடுத்த ஆழியாறு அறிவுத்திருக்கோவிலில் நடந்த நான்காவது வேதாத்திரி வேள்வி தின விழாவில், உலக சமுதாய சேவா சங்கத்தலைவர் மயிலானந்தன் வரவேற்றார். அறிவுத்திருக்கோவில் நிர்வாக அலுவலர் பாலசுப்பிரமணியம் தலைமை வகித்தார்.

        சி.பி.ஐ., முன்னாள் இயக்குனரும், மனித உரிமைகள் ஆணைய முன்னாள் தலைமை இயக்குனர் கார்த்திகேயன் பேசியதாவது: மனிதகுலம் முழுமையான நலவாழ்வு பெறுவதில் மனவளக்கலை யோகா முக்கியப்பங்கு வகிக்கிறது. வேதாத்திரி மகரிஷியின் தத்துவத்தை அரசு உட்பட பலரும் ஒப்புக்கொண்டுள்ளனர். சமுதாயத்தில் மொழி, இனம் வித்தியாசமின்றி அனைத்து தரப்பினரும் மனவளக்கலையை படிக்கின்றனர். பள்ளிகளில் மாணவர்களுக்கு மனவளக்கலையை கற்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிப்பதாகும்.

      மனவளக்கலை மூலமாக மனதிற்கு அமைதி கிடைக்கும்போது, குடும்பம், சமுதாயம் அனைத்தும் மேன்மையடைகிறது. முன்பு போர் ஏற்பட்டபோது ஆயிரக்கணக்கான மக்கள் மட்டுமே பலியாயினர். நவீன தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக எதிர்காலத்தில் போர் போன்ற அசம்பாவிதம் ஏற்பட்டால் கோடிக்கணக்கான மக்கள் ஒரேநொடியில் உயிரிழக்கக்கூடிய அபாயமுள்ளது. தனிமனித அமைதி மூலமே உலக அமைதியை உருவாக்க முடியும் என்பது வேதாத்திரியின் வாக்கு. எனவே, சமுதாயம், குடும்பம் உட்பட அனைத்து தரப்பிலும் அமைதி வேண்டும். தனி மனிதனிடம் அமைதி கிடைத்தால் மட்டுமே இது சாத்தியமாகும். மனவளக்கலை யோகா மூலமாக வன்முறை, குற்றம் போன்ற சம்பவங்களை வெகுவாக தவிர்க்க முடியும். இவ்வாறு, கார்த்திகேயன் பேசினார்.

        'சிறப்புணர்ந்த பெண்மதிப்பு' என்ற தலைப்பில் பேச்சாளர் பாரதி மற்றும் 'சீர்செய்த பண்பாடு' என்ற தலைப்பில் கவிஞர் நந்தலாலா பேசினர். நிறைவாக, அறிவுத்திருக்கோவில் இணை நிர்வாக அறங்காவலர் சின்னசாமி பேசினார்
Source: Dinamalar