Sunday, August 1, 2010

மரண தண்டனை தொடரவேண்டுமா?

            
             இந்தியாவில் மரணதண்டனையை முற்றிலும் ஒழிப்பதா, வேண்டாமா என்ற விவாதம் பல மட்டங்களிலும் நடைபெற்றுவருகிறது.இந்தியாவில் கடைசியாக மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது 2004ஆம் ஆண்டு. கொல்கட்டாவில் 14 வயது இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த தனஞ்ஜய் சாட்டர்ஜீ என்ற குற்றவாளிக்கு கடைசியாக தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது.

            மரண தண்டனை தொடரவேண்டுமா? நிறுத்தப்படவேண்டுமா? என்ற விவாதம் இருக்கையில், தேசிய மனித உரிமைகள் தலைவருமான கே.ஜி.பாலகிருஷ்ணன்(முன்னாள் தலைமை நீதிபதி) இது குறித்து தன் விளக்கத்தை தெரிவித்துள்ளார்.அவர், ’’இந்தியாவில் பல்வேறு விதமான குற்றங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் மரணதண்டனை தொடர்வதே நல்லது. மரணதண்டனை தீர்ப்பளிக்கப்பட்ட வழக்குகளை எடுத்துப் பார்த்தால் பெரும்பாலும் அந்தத் தண்டனைக்கு அந்த குற்றவாளிகள் உரியவர்களே என்பது புரியவரும்.

            உச்சநீதிமன்றம் மரணதண்டனை தீர்ப்பை அரிதிலும் அரிதான வழக்குகளுக்கு மட்டுமே பிரயோகிக்கவேண்டும் என்பதை ஒரு கொள்கை அளவில் கடைபிடித்து வருகிறது.கீழ் கோர்ட், மேல் கோர்ட், உச்சநீதிமன்றம் என்று மரணதண்டனை ஒருவருக்கு உறுதி செய்யப்பட்டாலும் அவருக்கு கருணை மனு என்ற வாய்ப்பு இருக்கிறது. அதனால் மரண தண்டனையை நீக்குவது கூடாது.மரண தண்டனையை முற்றிலும் ஒழிக்க வேண்டிய அவசியமில்லை’’ என்று கூறியுள்ளார்.
Source:Nakkeeran

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.