Friday, July 30, 2010

அறிவுக்கு வேலை கொடு!


* சிரத்தை தான் நமக்குத் தேவை. துரதிர்ஷ்டவசமாக நம்மிடம் சிரத்தை என்பதே இல்லாமல் போய்விட்டது. மனிதனுக்கு மனிதன் வேறுபடுவதற்குக் காரணம் சிரத்தையின் வேறுபாடே தவிர வேறொன்றும் இல்லை.

* விரிந்து மலர்ந்து கொண்டே செல்வது தான் வாழ்க்கை. தன்னுடைய சொந்த சுகவாழ்க்கையை மட்டும் கவனித்துக் கொண்டு சோம்பல் வாழ்க்கை வாழும் சுயநலக்காரனுக்கு நரகத்தில் கூட இடம் கிடைக்காது.

* தன்னிடம் இருக்கும் அறிவாற்றலை பயன்படுத்தாமல் மூடநம்பிக்கையில் கண்மூடித்தனமாக வாழ்பவனைக் காட்டிலும், பகுத்தறிவைப் பயன்படுத்தி கடவுளை நம்பாமல் நாத்திகனாக வாழ்பவன் உயர்ந்தவன்.

* நம்முடைய ஒவ்வொரு செயலிலும் தெய்வீகத்தை வெளிப்படுத்துவதும், நம்மைச் சார்ந்தவர்கள் அதை உணரச் செய்வதுமே வாழ்வின் லட்சியமாக இருக்கவேண்டும். இதற்கு நாம் தூய்மை, பொறுமை, விடாமுயற்சி ஆகிய பண்புகளைப் பெற்றாக வேண்டும்.

* யாரிடமும் சண்டையிடாதீர்கள். ஒருவரையும் குறை சொல்லி திரியாதீர்கள். இதனால் ஒரு நன்மையும் ஏற்படப் போவதில்லை.

-விவேகானந்தர்
Source: Dinamalar

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.