Thursday, July 15, 2010

பெண்மையின் உயர்வு


பெண்ணினத்தின் பெருமதிப்பை உணர்ந்தே உள்ளேன்.
       பேருலகில் வாழுகின்ற மக்கள் எல்லாம்
பெண்ணினத்தின் அன்பளிப்பே எனில் வேறென்ன
       பெருமை இதைவிட எடுத்துச் சொல்லுதற்கு?
பெண்ணினத்தின் இயல்பு பெற்ற மக்கள் தம்மை.
       பிறர் வளர்க்க அனுமதியார், மனமும் ஒவ்வார்.
பெண்ணினத்தின் விடுதலைக்கும் இந்தத் தியாகம்,
      பேருலக அமைதிக்கும், அவசியம் ஆம்.
                                                                                            - யேகிராஜ் வேதாத்திரி மகரிஷி






No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.