Thursday, May 27, 2010

One World Government - No borders, No VISA


            இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், இலங்கை ஆகிய நாடுகளில் இருந்து மலேசியாவுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு விசா தேவையில்லை என்று அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

            இதுகுறித்து மலேசி யாவின் துணைப் பிரதமர் முகைதின் யாசின் கூறியதாவது:

          இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், இலங்கை உள்ளிட்ட நான்கு நாடுகளில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளை கவருவதற்காக விசா தளர்வு அளிக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் வரும் ஜூலை ஒன்றாம் தேதி முதல் அமலுக்கு வரும். மலேசியாவில் உள்ள சுற்றுலா தலங்களை காணவரும் பயணிகள் விமான பயணச்சீட்டு மட்டும் எடுத்தால் போதும், விசா அவசியமில்லை.

           இதற்குமுன் இந்தியாவில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு விசாவில் சில சலுகைகள் மட்டும் வழங்கப்பட்டன. ஆனால் தற்போது அதில் உள்ள வரைமுறைகள் முற்றிலும் நீக்கப்பட்டுள்ளன. இதற்கு ஒத்துழைப்பு தரும்படி உள்நாட்டு விமான நிறுவனங்களுடன் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது. இதன் மூலம் இந்த ஆண்டு கூடுதலாக 8 ஆயிரம் முதல் 10 ஆயிரம் பயணிகள் வரை வரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Source: nakkheeran


No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.