ஆசைகளை ஒவ்வொன்றாக எடுத்துச் செயலாக்கத் திட்டமிட வேண்டும். முதலில் எதை எடுத்துக் கொள்ளலாம் என ஆராய்ந்து நிதானமாக அதற்கு மட்டும் திட்டம் வகுத்துச் செயல்படுத்த வேண்டும். ஒரு சமயத்தில் ஒன்றில் மட்டும் கவனம் செலுத்தினால் (Focussing attention on one thing at a time) வெற்றி நிச்சயம். நிறைவு செய்ய முடியாத நூறு ஆசைக் குப்பைகளை மனதில் சேர்த்து வைத்துக் கொண்டு திணறுவதில் யாருக்கு என்ன லாபம்; மன அமைதி முதலில் போயிற்று, மனதின் பலம் போயிற்று. செயல் திறன் போயிற்று, நற்குணங்கள் போயின, எரிச்சலும் கோபமும் அடிக்கடி வந்தன. முகத்தில் தெளிவு போய் சோகம் படிந்தது. ஆனால், இந்தத் தற்சோதனை வெற்றி அடைந்த பின் பார்த்தால் மனம் கலகலப்பாக இருக்கிறது. நெஞ்சில் தைரியம் வந்துவிட்டது. எதையும் சாதித்துவிடலாம் என்ற உற்சாகம் மிகுந்து இருக்கிறது. மனத்தின் குறுகல் ஒழிந்து விசாலம் வந்துவிட்டதால் பொறுமை, அன்பு என்ற பல நற்குணங்கள் மிகுந்து இருக்கின்றன. எடுத்த காரியத்தில் வெற்றி கிடைக்கிறது.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.