Thursday, February 25, 2010

அங்கிங் கெனாதபடி - தாயுமான அடிகள்


அங்கிங் கெனாதபடி யெங்கும் ப்ரகாசமாய்

ஆன்ந்த பூர்த்தியாகி

அருளொடு நிறைந்ததெது தன்னருள் வெளிக்குளே

அகிலாண்ட கோடியெல்லா ந்



தங்கும் படிக்கிச்சை வைத்துயிர்க் குயிராய்த்

தழைத்ததெது மனவாக்கினில்

தட்டாமல் நின்றதெது சமயகோ டிகளெலா ந்

தந்தெய்வம் எந்தெய்வமென்



றெங்குந் தொடர்ந்தெதிர் வழக்கிடவும் நின்றதெது

எங்கணும் பெருவழக்காய்

யாதினும் வல்லவொரு சித்தாகி யின்பமாய்

என்றைக்கு முள்ளதெதுமேல்



கங்குல்பக லறநின்ற எல்லையுள தெதுஅது

கருத்திற் கிசைந்தததுவே

கண்டன வெலாமோன வுருவெளிய தாகவுங்

கருதிஅஞ் சலிசெய்குவாம்.

- தாயுமான அடிகள்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.